Published : 27,May 2017 03:56 PM

3 மணி நேரத்தில் உலகின் எந்த மூலைக்கும் செல்லும் அதிவேக விமானம்

worlds-fastest-flight-xs-1-made-by-american-army

உலகின் எந்த பகுதிக்கும் 3 மணி நேரத்தில் செல்லும் விமானத்தை அமெரிக்க ராணுவம் தயாரித்துள்ளது.

உலகின் எந்த மூலைக்கு மூன்றே மணி நேரத்தில் செல்லும் போர் விமானத்தை அமெரிக்க ராணுவம் தயாரித்துள்ளது. இந்த அதிவேக ராக்கெட் போன்ற வேகம் கொண்ட விமானத்தை அமெரிக்க ராணுவம் மிக ரகசியமாக தயாரித்துள்ளது. 

மேலும் அதற்கு போயிங் எக்ஸ்.எஸ்.1 என பெயரிடப்பட்டுள்ளது. பான்டம் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனம் அமெரிக்க ராணுவத்துக்காக இதை தயாரித்துள்ளது. அதற்கான அனுமதியை இந்நிறுவனத்துக்கு ராணுவம் வழங்கியது. 

இந்த விமானம் சுமார் 1,360 கிலோ எடையை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மற்ற விமானங்களை விட 5 முதல் 10 மடங்கு அதிக வேகம் செல்லும் திறன் கொண்டது. இந்த விமானம் மூலம் உலகின் எந்த பகுதிக்கும் 3 மணி நேரத்தில் சென்றடையும். அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த விமானம் விண்கலம், போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்