Published : 07,Nov 2019 03:00 PM

ரயில் இணைப்பு தண்டவாளத்தில் கற்கள் வைத்தால் சிறை.. அதிகாரிகள் எச்சரிக்கை..!

Railway-officers-warning-to-students

ரயில்வே இணைப்பு தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் வைத்தால், 6 மாதம் சிறைத் தண்டனை என ரயில்வேத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையத்திற்கு அருகில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. தினமும்  பல்லாயிரக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ரயில் நிலையத்திற்கு அருகில் பள்ளி இருப்பதால், மாணவர்கள் காலை, மாலை, உணவு இடைவேளையின்போது  ரயில் நிலையம், தண்டவாளம் அருகில் அமர்ந்தும், தண்டவாளத்திற்கு இணைப்பு பகுதியில் ஜல்லி கற்கள் வைத்தும் விளையாடி வருகின்றனர்.

தண்டவாளத்தில் தினமும் குவியலாக ஜல்லி கற்கள் இருப்பது குறித்து ரயில்வே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டதில், பள்ளி மாணவர்கள் விளையாட்டாக  தண்டவாளம் இணைப்பு பகுதியில் ஜல்லி கற்கள் வைப்பது தெரியவந்தது. இதனையடுத்து அரக்கோணம் ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் ரகு தலைமையில் ரயில்வே அதிகாரிகள் இன்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.

மாணவர்கள் ரயில் நிலையத்திற்கு வரக் கூடாது என்றும்,  தண்டவாளத்தை கடந்து செல்வது, தண்டவாளம் அருகே அமர்ந்து சாப்பிடுவது, விளையாடுவது இணைப்பு பகுதியில் ஜல்லி கற்கள் வைப்பதால் ரயில் கவிழும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார். மாணவர்கள் தொடர்ந்து தண்டவாளத்தில் கற்கல் வைக்கும் சம்பவத்தில் ஈடுபட்டால்,  ரயில் கவிழ்க்க சதி திட்டம் செய்வதாக கைது செய்யப்பட்டு 6 மாத சிறை தண்டனையும், பள்ளி படிப்பு தொடர முடியாத நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்