Published : 26,May 2017 11:30 AM

செய்தியாளர் சந்திப்பில் தூங்கி வழிந்த முதலமைச்சர்

Karnataka-Chief-Minister-Siddaramaiah-Dozes-Off--Again

செய்தியாளர் சந்திப்பின்போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தூங்கி வழிந்த சம்பவம் நடந்துள்ளது. 


பெங்களூருவில் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் உறுப்பினர் வேணுகோபால், பாஜகவைக் கடுமையாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார். முதல்வரிசையில் வேணுகோபாலுக்கு அருகில் அமர்ந்திருந்த சித்தராமையா தூங்கி வழிந்தார். சித்தராமையா தூங்கி வழிவது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. முக்கியமான இடங்களில் சித்தராமையா தூங்கி வழிவது இது முதல்முறையல்ல. சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது சித்தராமையா தூங்கினார். அதைக் கண்ட கர்நாடக மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி லக்‌ஷ்மி ஹெப்பால்கர்,  தூங்காமல் விழித்திருங்கள் என்ற குறிப்புடன் துண்டு சீட்டு ஒன்று அனுப்பியதாகக் கூறப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த பொதுக்கூட்ட மேடையிலேயே சித்தராமையா தூங்கி வழிந்தது போன்ற புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின. இதற்கெல்லாம் மேலாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்த விவாதம் கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 2014ம் ஆண்டு ஜூலையில் காரசாரமாக நடந்து கொண்டிருந்தது. அந்த விவாதத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் பங்கேற்று தங்களது கருத்துகளைக் கூறிவந்த நிலையில், முதலமைச்சர் சித்தராமையா தூங்கிக் கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.  
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்