[X] Close

போதையில் வாகனம் ஓட்டிய கிரிக்கெட் வீரருக்கு தண்டனை!

Doug-Bracewell--NZ-cricketer-punished-for-drink-driving-over-dead-cockatoo-incident

மதுஅருந்தி வாகனம் ஓட்டியதால் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டாக் ப்ராஸ்வெல் 100 மணி நேரம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டாக் ப்ராஸ்வெல். 26 வயதான இவர் மூன்றாவது முறையாக மது அருந்தி வாகனம் ஓட்டியதால் அவர் 100 மணி நேரம் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என அந்நாட்டு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி மூன்று முறை வழக்குப்பதிவு செய்யப்படுமானால் அந்நாட்டு வழக்கப்படி தண்டனை வழங்கப்படும். இது குறித்து டாக் ப்ராஸ்வெல் கூறும்போது, ‘நான் செய்த தவறு எனது குடும்பம், நண்பர்கள், கிரிக்கெட் ரசிகர்களிடையே எனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது’ என வருத்தம் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close