Published : 30,Oct 2019 06:16 AM

காவலரிடம் சவால்: அதிரடி சோதனை நடத்தி பாஸ்ட் புட் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

Chennai-Corporation-officials-seal-pudhupettai-fastfood-hotel

சென்னையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததோடு பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தி வந்த துரித உணவுக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 

சென்னை புதுப்பேட்டையில் ஜாகீர் உசேன் என்வருக்கு சொந்தமான துரித உணவுக் கடையில், இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் கவரில் உணவு பரிமாறப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஆயுதப்படை காவலர் சரவணன் கடைக்காரரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் சரவணனை கடைக்காரர் மிரட்டல் தொனியிலும், சவால் விடுத்தும் பேசியுள்ளார். அங்கு நடந்த சம்பவம் அனைத்தையும் காவலர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோ காட்சி காவல்துறையைச் சேர்ந்த குழுக்களில் பரவியது. பின்னர் இந்த விவகாரம் மாநகராட்சி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் துரித உணவுக் கடையில் பிளாஸ்டிக் பொருட்‌கள் பயன்பாடு குறித்து தகவல் அறிந்து வந்த, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் திடீர் சோதனையில் ஈடுபட்ட‌னர்.

அப்போது, தரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, 20 கிலோ உணவுப் பொருட்களை அழித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்