Published : 30,Oct 2019 02:12 AM

கடலில் காணாமல் போன 120 மீனவர்கள் !

120-fishermen-found-missing-from-Kanniyakumari-district

கடலில் காணாமல்போன கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 120 பேரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, ஆட்சியரிடம் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.

Image result for arabian sea fisherman missing

வள்ளவிலை, தூத்தூர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள், 15 நாட்களுக்கு முன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அரபிக் கடலில் உருவான புயல் சின்னம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ஏராளமான விசைப்படகு மீனவர்கள் அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்துவிட்டனர். அதில் தூத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த 120 மீனவர்களின் விவரங்கள் தெரியவில்லை என கூறப்படுகிறது. அதிநவீன தகவல் தொடர்பு கருவிகள் இருந்து, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என தொடர்பு கொள்ள முடியவில்லை உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்த தூத்தூர் மண்டல பங்குத் தந்தைகள், மீனவர்களை மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்