Published : 25,Oct 2019 05:00 AM
முதல்வர் பழனிசாமியை பாராட்டி பிரதமர் மோடி கடிதம்

இந்திய- சீன உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததற்காக முதல்வர் பழனிசாமியை பாராட்டி பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “சீன அதிபர் வருகையின்போது தந்த வரவேற்பு, அன்பான உபசரிப்பு, நமது கலாசாரம், மரபை ஒரு சேர பிரதிபலித்தது. மாமல்லபுரம் வந்தது தனக்கும், சீன அதிபருக்கு மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது. மாநாட்டிற்கு சிறப்பான ஏற்பாடு செய்த தமிழக மக்கள், கலாசார, சமூக, அரசியல் சீரமைப்பு மற்றும் அரசுக்கு பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.