பஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளை தொடர்பான விசாரணையில், மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்ட 3 கிலோ நகைகளை காவல்துறை தனிப்படை பறிமுதல் செய்துள்ளது.
சமயபுரம் 1ஆம் எண் டோல்கேட் அருகே செயல்பட்டு வந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கியில், கடந்த ஜனவரி 28ஆம் தேதி கொள்ளைச் சம்பவம் நடந்தது. வங்கி சுவரை துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 470 சவரன் நகைகளையும், 17 லட்சம் ரூபாய் பணத்தையும் மூட்டை கட்டி அள்ளிச் சென்றனர். யார் அந்தக் கொள்ளையில் ஈடுபட்டது எனத் தெரியாமல் கடந்த 9 மாதங்களாக திணறி காவல்துறை வந்தது.
இந்நிலையில், அக்டோபர் 2ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில், கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், லலிதா ஜுவல்லரி மட்டுமல்ல, பஞ்சாப் நேஷ்னல் வங்கிக் கொள்ளையையும், தான் அங்கம் வகிக்கும் திருவாரூர் முருகனின் கும்பல்தான் அரங்கேற்றியது என பரபரப்பு வாக்குமூலத்தை அளித்ததாக கூறப்படுகிறது.
திருடிய நகைகளை மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள மலையடிவாரத்தில் புதைத்து வைத்திருப்பதாக தகவலையும் கொடுத்திருக்கிறார். அதை தொடர்ந்து தனிப்படை, கடந்த புதன்கிழமை இரவு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மலையடிவாரத்திற்கு சென்றது.
கணேசன் சொன்ன இடத்தில் தோண்டிப் பார்த்தபோது, கொத்துக் கொத்தாக தங்க நகைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் காவல்துறையினரே எதிர்பாராத ஆச்சர்யம் என்னவென்றால், அதில் லலிதா ஜுவல்லரிக்கு சொந்தமான நகைகளும் இருந்ததுதான். இங்கு பறிமுதல் செய்யப்பட்ட 3 கிலோ நகைகளில், ஒன்றரை கிலோ பஞ்சாப் நேஷ்னல் வங்கிக்கும், ஒன்றரை கிலோ லலிதா ஜுவல்லரிக்கும் சொந்தமானவை என விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், நகைகள் குறித்து தகவல் கொடுத்த கணேசனை மேலும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவ்வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கும் தனிப்படை, எஞ்சிய நகைகளையும் மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'மொழி அரசியலில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்' - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்