Published : 15,Oct 2019 10:24 AM

கைகொடுக்குமா வடகிழக்கு பருவமழை? - வானிலை ஆய்வாளர்கள் விளக்கம்

Conditions-favourable-for-N-E-monsoon-to-set-in-by-October-17

வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் மழைப்பொழிவு இந்த ஆண்டு எப்படி இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

தமிழகத்தில் 60% மழைப்பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு 24% குறைவாக பெய்தது. இதனால் இந்த ஆண்டு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழையின்போது பெய்த மழையால் தண்ணீர் பஞ்சம் சற்றே தணிந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை ஒட்டிய அளவோ அல்லது இயல்பை விட கூடுதலாகவோ பதிவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது முன்பாகவே தொடங்க உள்ள பருவமழையால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறுகின்றனர். நவம்பர், டிசம்பர் மாதங்களில் 5 முதல் 6 காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேற்கு இந்திய பெருங்கடலில் வெப்ப நிலை அதிகமாக உள்ளது. அதேபோல பசிபிக் கடலில் நினோ நிலை இயல்பாகவே இருப்பதால் 2015ஆம் ஆண்டை போல மழை பொழிய வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும் சென்னையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக மழை பதிவாகும் எனவும் கூறுகின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.

தென்மேற்கு பருவமழையால் தென்மாவட்டங்களில் மழை பொழிந்து நீர் நிலைகள் ஓரளவு நிரம்பியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் வட மாவட்டங்களிலும் மழை பெய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்