[X] Close

இன்று முதல் ரெட்மி 4!

Xiaomi-Redmi-4

ஜியோமி நிறுவனத்தின், ரெட்மி 4 என்கிற புதிய ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.

மொத்தம் 3 ரகங்களில் ரெட்மி 4 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 6,999 முதல் 10,999 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

6,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்ஃபோனில் 2ஜிபி ரேம் வசதியும், 16 ஜிபி ரோம் வசதியும் இருக்கிறது. 8,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்ஃபோன் 3ஜிபி ரேம், மற்றும் 32ஜிபி ரோம் வசதியுடனும், 10,999 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம், 64 ஜிபி ரோம் வசதியுடனும் வெளிவருகிறது.


Advertisement

கேமரா பிரியர்களுக்கு ஏற்ற வகையில் இந்த மூன்று விதமான ஸ்மார்ட்ஃபோன்களிலும் 5 மெகா பிக்சல் முன்பக்க கேமராவும், பின்பக்கம் 13 மெகாபிக்சல் கேமரா திறனும் உள்ளது. 4100 மில்லி ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரி மூன்றுவிதமான ஃபோன்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சார்ஜ் சிறந்த முறையில் நிற்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். பொதுவாக காஸ்ட்லி ஃபோன்களில் காணப்படும் ஃபிங்கர் பிரின்ட் வசதி இந்த ஸ்மார்ட்ஃபோனின் கூடுதல் சிறப்பம்சங்களாகும்.

இந்த 3 ரக ரெட்மி 4 ஸ்மார்ட்ஃபோன்களின் பொதுவான சிறப்பம்சங்களாக, 5 இன்ச் HD Touchscreen, 2.5 D Curved Glass, ஆன்ட்ராய்ட் 6.0 மார்ஷ்மெலோவ் பயன்பாட்டு மென்பொருள், 128 ஜிபி வரை சேமிப்புத் திறனை நீட்டிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று, மே 23-ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளது. குறிப்பிட்ட இணையதளங்கள் மூலம் இதனை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.


Advertisement

Advertisement
[X] Close