[X] Close

“அஸ்வின், ஜடேஜா மீண்டும் கலக்கிவிட்டார்கள்” - விராட் கோலி பாராட்டு

Jadeja-and-Ashwin-again-really-good---Virat-Kohli

அஸ்வின், ஜடேஜா மீண்டும் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடிவிட்டார்கள் என இந்தியக் கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா முதல் இன்னிங்ஸில் 176 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 160 ரன்களும் குவித்தார். இதனால் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 


Advertisement

பந்துவீச்சில் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட்டும் சாய்த்தார். ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 40 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டும் வீழ்த்தினார். முகமது ஷமி முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

போட்டியின் வெற்றி குறித்து பேசிய விராட் கோலி, “முதல் மூன்று நாட்களில் பேட்டிங் சிறப்பாக இருந்தது. நாங்கள் ஒரு பிரிவை இழந்தோம். 500 ரன்களை கடக்கும் போது, நாம் எப்போது மேலே இருப்பது போல தோன்றும். ஆனால் தென்னாப்பிரிக்க அணியில் பதிலடி கொடுத்து தாங்கள் இன்னும் களத்தில் இருக்கிறோம் என்பதை காட்டினர். வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் என இரு தரப்பு நன்றாக விளையாடினர். ஷமி, இஷாந்த், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் போன்றவர்கள் நம் அணியில் சிறப்பாக உள்ளனர். ஜடேஜா மற்றும் அஸ்வின் மீண்டும் நன்றாக விளையாடியுள்ளனர். இரண்டாவது இன்னிங்ஸில் ஷமி தடுப்பு பவுலராக மாறிவிட்டார்” என்று கூறினார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close