ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை சிறந்த அணியாக மாற்றுவதற்கு உதவியாக இருப்பேன் என்று அந்த அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள லான்ஸ் குளுஸ்னர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சிம்மன்ஸின் பதவி காலம் உலகக் கோப்பையுடன் முடிவடைந்ததை அடுத்து புதிய பயற்சியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. வரப்பட்ட 50 விண்ணப்பங்களில், தென்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் குளூஸ்னர் புதிய தலைமை பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2020-ம் ஆண்டு வரை அவர் இந்த தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருப்பார். பிறகு அணியின் செயல்பாட்டின் அடிப்படையில் அவரது ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
குளுஸ்னர் கூறும்போது, ‘சர்வதேச கிரிக்கெட்டில் திறமையான வீரர்களை கொண்ட அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பதை பெருமையாகக் கருதுகிறேன். கடுமையான பயிற்சி முலம் உலகின் சிறந்த அணியாக ஆப்கான் அணியை மாற்ற முடியும் என்று நம்புகிறேன். அவர்களின் கிரிக்கெட்டை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு உதவியாக இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!