Published : 22,May 2017 02:18 AM

ஐபிஎல் 2017: அசத்திய வீரர்கள்

star-of-IPL-2017--Bhuvneshwar-Kumar--David-Warner

ஐபிஎல் 2017 -இல் பல பிரிவுகளில் அசத்திய வீரர்களைப் பற்றிய குறிப்பு..

2017 ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில், ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்தார். 14 போட்டிகளில் விளையாடிய புவனேஸ்வர்குமார், 26 விக்கெட்களை வீழ்த்தினார். சிறந்த பந்துவீச்சாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 19 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தோர் பட்டியலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலிடம் பிடித்தார். 14 போட்டிகளில் விளையாடிய வார்னர், ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 641 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 59 பந்துகளில் 126 ரன்களை வார்னர் விளாசினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்