[X] Close

’பொன்னியின் செல்வன்’ படத்துக்காக தலைமுடியை வளர்க்கும் ஹீரோக்கள்!

The-lead-actors-of--Ponniyin-Selvan--asked-to-grow-long-hair-

’பொன்னியின் செல்வன்’ படத்துக்காக, அதில் நடிக்கும் முன்னணி ஹீரோக்கள் தலைமுடியை அதிகமாக வளர்த்து வருகின்றனர்.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் படமாக்கு கிறார் மணிரத்னம். இதில் நடிக்க 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.


Advertisement

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், அமிதாப்பச்சன், கீர்த்தி சுரேஷ்,  ஐஸ்வர்யாராய், சத்யராஜ், ரகுமான், ஜெயராம், அமலாபால் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிப்பது பெருமை  என்று ஐஸ்வர்யாராய் கூறியுள்ளார்.  

ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தாய்லாந்தில் தொடங்குகிறது. அரண்மனை செட் அமைத்து 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். 


Advertisement

இதற்கிடையே, விக்ரம், கார்த்தி, பார்த்திபன், ஜெயம் ரவி ஆகியோரிடம் தலைமுடியை பெரிதாக வளர்க்குமாறு இயக்குனர் மணிரத்னம் கேட்டுக்கொண்டுள்ளார். அந்தக் காலத்து மன்னர்கள் போல நடிப்பதற்காக அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள் ளார். இதையடுத்து தங்கள் முடியை அவர்கள் அதிகமாக வளர்க்கத் தொடங்கியுள்ளனர். இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.


Advertisement

Advertisement
[X] Close