[X] Close

தமிழகத்தில்‌ இடி, மின்னலுடன் கூடிய மழை

Rain-in-Tamilnadu

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூர், மதகுபட்டி, திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்ததால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. 


Advertisement

ஈரோடு சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் மலைப் பகுதியில் பெய்த மழையால், மலை கிராம விவசாயிகள் மகிழ்ச்சியடைந் தனர். இதேபோன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால், வெப்பம் தணிந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை யால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close