Published : 20,May 2017 01:09 PM

நீட் தேர்வில் வெற்றி பெற... அரசுப் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு

special-classes-in-government-school

தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவியர்கள் நீட் தேர்வில் வெற்றிபெறும் பொருட்டு பள்ளிகளிலேயே சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் நீட் பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை.

இதனிடையே தமிழகத்தில் நடைபெற்ற நீட் தேர்வால் பெரும் சர்ச்சையை வெடித்தது. நீட் தேர்வின் போது பெரும் கெடுபிடி விதிக்கப்பட்டதால் மாணவர்கள் தங்கள் முழுக்கை சட்டையை கிழித்துவிட்டு தேர்வறைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டது. ஒருபடி மேலாக கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழட்ட சொல்லியிருக்கிறார்கள். இது தொடர்பாக ஆசிரியைகளும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறும் விதமாக அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு 2.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதன்படி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு வாரத்தில் 3 நாட்கள் ஜேஇஇ, நீட் தேர்விற்கான சிறப்பு வகுப்புகள் நடைபெறும் எனவும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்