Published : 12,Sep 2019 04:46 PM
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் 14 சென்டி மீட்டர் மழையும், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 13 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 6 சென்ட் மீட்டர் அதிகமாக பெய்திருப்பதாகவும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை அக்டோபர் முதல் வாரத்தில் முடியும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெவித்துள்ளது.