Published : 19,May 2017 05:59 AM

இனி வாலாட்ட முடியாது: நடிகைகள் பாதுகாப்புக்கு சங்கம்!

women-in-cinema

இந்தியாவில் முதல்முறையாக நடிகைகளின் பாதுகாப்புக்கென ஓர் அமைப்பு மலையாள திரையுலகில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நடிகைகள் மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கல், பீனா பால், பார்வதி மேனன் உள்ளிட்டோர் இந்த அமைப்பை வழிநடத்தவுள்ளனர்.

நடிகைகளின் பாதுகாப்பு குறித்து நீண்ட காலமாகவே கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பலரது கவனத்தைப் பெற்றது. நடிகைகளின் பாதுகாப்பு, சமமாக மதிக்கப்படுவது குறித்து விரிவான விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில், தற்போது நாட்டில் முதல்முறையாக, மலையாள நடிகைகள் சேர்ந்து ஓர் அமைப்பை தொடங்கியிருக்கின்றனர். “Women in Cinema Collective” என்ற இந்த அமைப்பு நடிகைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது.

மஞ்சு வாரியர், பீனா பால், பார்வதி, விது வின்சன்ட், ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து இந்த அமைப்பை வழிநடத்தவுள்ளனர். பெண் கலைஞர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, அதற்கான ஆதரவைப் பெற நேற்று மாலை கேரள முதல்வர் பினராயி விஜயனை இந்த அமைப்பினர் சந்தித்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்