வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 297 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்த அணி முதல் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் நிலைத்து விளையாட, மறுபுறம் மயாங் அகர்வால் 5 (13), புஜரா 2 (4), விராட் கோலி 9 (12) என அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 44 (97) ரன்களில் அரை சதத்தை எட்டாமல் ராகுலும் பெவிலியன் திரும்பினார்.
பின்னர் வந்த ரஹானே நிலைத்து ஆடினார். அரை சதத்தை கடந்த அவர் 81 (163) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தங்கள் பங்கிற்கு ரிஷாப் 24 (47) மற்றும் ஹனுமா விஹாரி 32 (56) ரன்கள் எடுத்தனர். பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா 58 (112) எடுத்து விக்கெட்டை இழந்தார். 96.4 ஓவர்களில் 297 ரன்கள் சேர்த்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேமர் ரோச் 4 விக்கெட்டுகளையும், கேப்ரியல் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix