Published : 13,Jan 2017 05:58 AM

அவசரச் சட்டம் இயற்றாதது ஏன்?: மு.க.ஸ்டாலின்

dmk-protest-for-jallikattu-issue-in-chennai

பல்வேறு விவகாரங்களுக்கா அவசரச் சட்டங்களை கொண்டுவரும் மத்திய அரசு, தமிழர்களின் பாரம்பரியத்தை‌ காப்பாற்ற அவசரச் சட்டத்தை இயற்றாதது ஏன் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மோடி அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 22 அவசரச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். விவசாய நிலத்தை கையகப்படுத்துதல், அந்நிய முதலீட்டு உள்ளிட்டவற்றிற்காக அவசரச் சட்டங்களை இயற்றும் மத்திய அரசு, தமிழர்களின் பாரம்பரியத்தை கா‌ப்பாற்ற ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அவசரச்சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார். ‌மத்திய அரசு‌ முய‌ற்சித்தால் நாளைக்குள் அவசரச் சட்டத்தை இயலும் என்று அவர் கூறியுள்ளார். நடிகர்களை எளிதில் சந்திக்கும் பிரதமர் மோடி, ஜல்லிக்கட்டுக்காக 50 எம்.பிக்களை பார்க்காதது ஏன் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்