[X] Close

சிக்சர் மழையில் மேக்ஸ்வெல் டாப்!

Maxwell-scores-continuous-sixes

ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் அதிக சிக்ஸர் விளாசியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 14 போட்டிகளில் அவர் 26 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 முறை, எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்தை பறக்கச் செய்தார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், 13 போட்டிகளில் 24 சிக்ஸர்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக 126 ரன்கள் எடுத்த போட்டியில் மட்டும், 8 சிக்ஸர்களை விளாசினார் வார்னர். பஞ்சாப் அணி லீக் சுற்றோடு வெளியேறிவிட்டதால், அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களில் முதலிடத்தை பிடிக்க வார்னருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

டெல்லி அணி லீக் சுற்றோடு வெளியேறிய போதிலும், அந்த அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 14 போட்டிகளில் விளையாடி 24 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.


Advertisement

குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் 9 சிக்ஸர்களை விளாசினார் ரிஷப் பந்த். அந்தப் போட்டியில் நூலிழையில் சதத்தை தவறவிட்டார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close