நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்தின் இட்டலாறு, நடுவட்டம், குறுத்துக்குழி ஆகிய பகுதியில் வசித்து வந்த தென்னன், அமுதா, பாவனா, விமலா உள்ளிட்ட ஐந்து பேர் வீடுகள் இடிந்து விழுந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் உயிரிழந்தனர். இந்நிலையில், வெள்ள பாதிப்புக்களை பார்வையிட வந்த மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கட்சி நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். அப்போது நீலகிரி எம்.பி.ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதைத் தொடர்ந்து எமரால்ட் பகுதியில் உள்ள முகாமில் தங்கியிருக்கும் மக்களை ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் பேசிய அவர், மறுசீரமைப்பு பணிகளுக்காக திமுக எம்பி, எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரையும் அமைச்சர்கள் சந்திக்கவில்லை என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
Loading More post
நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடும் பச்சைக் கொடி!
உலக உயர் ரத்த அழுத்த தினம் - High BP நோயாளிகள் கட்டாயம் தவிர்க்கவேண்டிய உணவுகள்!
குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் சீன ராக்கெட்டின் எச்சங்களா?
இது சினிமா காட்சியா! நடுரோட்டில் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!
நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்