[X] Close

முத்தலாக் மசோதா: அதிமுக V/s திமுக காரசார வாதம்

Triple-talaq-bill--dmk--admk-make-arguments

மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட முத்தலாக் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் திமுக  மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மக்களவையில் முத்தலாக் மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் அதற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் பேசினார். அவர் பேசும்போது, “ பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் நடவடிக்கையாகவே முத்தலாக் மசோதாவை பார்க்கிறேன். சமூகத்தில் பெண்கள் உயர் பதவிகளை எட்ட பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். பாலின ரீதியிலும் சமூக ரீதியிலும் பாகுபாடுகள் கூடாது என நமது அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக இம்மசோதா உள்ளது” எனத் தெரிவித்தார். கடந்த மக்களவையில் இடம்பெற்றிருந்த அதிமுகவைச் சேர்ந்த அன்வர் ராஜா, முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது ரவீந்திரநாத் ஆதரவு தெரிவித்து பேசினார்.


Advertisement

இதனிடையே பெண்கள் உரிமையை பாதுகாக்க முத்தலாக் மசோதாவை கொண்டு வந்துள்ளதாக கூறும் மத்திய அரசு முதலில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றட்டும் என திமுக உறுப்பினர் கனிமொழி பேசினார். அவர் பேசும்போது, “ மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றுவோம் என நீங்கள் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளீர்கள்.

ஆனால் அது நிறைவேற்றப்படவே இல்லை. முக்கியமான முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் போதிய பெண்கள் அவையில் இல்லை. எங்களுக்கு எது நல்லது என்ற எங்களை முடிவெடுக்க விடுங்கள். எங்களுக்கு எது நல்லது என ஆண்கள் முடிவெடுப்பதை நாங்கள் விரும்பவி்ல்லை. முதலில் 33% இட ஒதுக்கீட்டை கொடுத்து விட்டு பின்னர் முத்தலாக் பற்றி பேசுங்கள்” என தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close