Published : 25,Jul 2019 10:27 AM
ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - புதுச்சேரி முதல்வர்

ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்கவுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் உண்ணாவித போராட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்கவுள்ளதாகக் கூறினார்.
புதுச்சேரியில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் ஏற்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார். கட்சி பாகுபாடுகளை மறந்து மாநில நலனுக்காக அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம் என்றும் அவர் கூறினார். புதுச்சேரி மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.