இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்பது என்று உறுதி கொள்வோம் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்தும் அதனால் நமக்கு மட்டுமின்றி, அடுத்த தலைமுறைக்கும் விளையும் பயன்கள் குறித்தும் அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் பெய்த மழையில் எத்தனை சதவிகித நீரை நாம் சேமிட்து வைத்திருக்கிறோம்? அரசு தொடர்ந்து தன் கடமையை செய்து கொண்டுதான் வருகிறது. ஆனால் மழை நீர் சேமிப்பை ஒரு குழுவோ, ஒரு அமைப்போ, ஒரு அரசோ மட்டும் செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல. அவரவர் இருப்பிடத்தில் மழை நீரை சேமிப்பதே இதற்கு நிரந்தர தீர்வாகும்.
#tnwaterwise #rainwaterharvesting An appeal to dear people of TamilNadu அன்புக்கினிய தமிழக மக்களுக்கு பணிவான வேண்டுகோள் pic.twitter.com/rsJweff4LV — SP Velumani (@SPVelumanicbe) July 22, 2019
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மழை நீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இதை கருத்தில் கொண்டு தமிழக மக்கள் அனைவரும் வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்பது என்று உறுதி கொள்வோமாக” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி