ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், தோனி- கேதர் ஜாதவ் ஆடிய விதம் ஏமாற்றமளித்தது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின. முதலில் களமிறங்கிய இந்திய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் சேர்த்தது. கேப்டன் விராத் கோலி 67 ரன்களும் கேதர் ஜாதவ் 52 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 225 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆப்கன் அணி, 213 ரன்னுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது. கடைசி ஓவரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பையில் 50 வது வெற்றியை பதிவு செய்திருக்கிறது இந்திய அணி.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினார்கள். அதிக ரன்களை அடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். மிடில் ஆர்டரில் தோனியும் கேதர் ஜாதவும் மிகவும் நிதானமாக ஆடினர். தோனி 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களின் பார்ட்னர்ஷிப் ஏமாற்றமளித்ததாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித் துள்ளார்.
இந்திய அணி பேட்டிங் செய்தபோது, மிடில் ஆர்டரில் தோனியும் கேதர் ஜாதவும் மிகவும் நிதானமாக ஆடினர். தோனி 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களின் பார்ட்னர்ஷிப் ஏமாற்றமளித்ததாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘’இந்திய அணியின் ஆட்டத்தைக் கண்டு ஏமாற்றமடைந்தேன். இன்னும் நன்றாக ஆடியிருக் கலாம். தோனி- கேதர் ஜாதவ் பார்ட்னர்ஷிப் எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் மிகவும் மெதுவாக ஆடினார்கள். அது நேர்மறையான ஆட்டம் இல்லை. 34 ஓவர்கள் ஸ்பின் பந்துகளை சந்தித்து 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளோம். விராத் கோலி ஆட்டமிழந்த பின், 45 வது ஓவர் வரை அதிகமான ரன்கள் சேர்க்கவில்லை. மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி, அதிக ரன்கள் சேர்த்திருக்கவேண்டும்’’ என்றார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!