[X] Close

வெந்நீர் கொட்டி, வில்லன் படுகாயம்

rksuresh-suffers-injury

வேட்டை நாய் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பலத்த காயமடைந்தார்.


Advertisement

இயக்குநர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். தொடர்ந்து மருது உட்பட சில படங்களில் வில்லனாக நடித்துவந்த ஆர்.கே.சுரேஷ், இப்போது ஹீரோவாக நடித்துவருகிறார். இவர் நடிக்கும் ’வேட்டை நாய்’ என்ற படத்தின் ஷூட்டிங் பெரியகுளம் அருகே நடந்து வந்தது. இதை ஜெய்சங்கர் இயக்குகிறார். சுபிக்ஷா ஹீரோயினாக நடிக்கிறார்.

ஆர்.கே.சுரேஷும் வில்லனும் மோதுவது போன்ற சண்டைக்காட்சி பெரியகுளத்தில் படமாக்கப்பட்டது. ’நாக் அவுட்’ நந்தா காட்சியை இயக்கிக் கொண்டிருந்தார். முனீஸ்வரன் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்.


Advertisement

எரியும் அடுப்பில், வெந்நீர் கொதிப்பது போலவும் அதன் அருகே இருவருமே சண்டை போடுவது போலவும் காட்சி படமாக்கப்பட வேண்டும். அப்போது எதிர்பாராத விதமாக, அடுப்பில் சரிந்து விழுந்தார் ஆர்.கே.சுரேஷ். இதில் வெந்நீர் கொட்டி அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அலறிய அவரை, படக்குழுவினர் மீட்டு, மதுரையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

Related Tags : rksureshrksuresh tharai thappatai

Advertisement

Advertisement
[X] Close