[X] Close

வாகனம் நிறுத்துவதில் தகராறு - வாலிபர் மீது டிராக்டர் ஏற்றிக் கொலை? 

A-man-as-murder-for-parking-issue-in-sholingur

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த அக்கச்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்(26). தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் இவர், நேற்று இரவு குடிகுண்டாவில் நடைபெற்று வரும் திரெளபதி அம்மன் திருக்கோயிலில் தெருக் கூத்து பார்க்க நண்பர்களுடன் இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது கோயில் அருகே இருச்சக்கர வாகனத்தை நிறுத்துவதில் வினோதுக்கும் சின்னகுடிகுண்டாவைச் சேர்ந்த லோகநாதன் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்களை பொதுமக்கள் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். 

Image result for murder

இதனையடுத்து தெருக்கூத்து பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வினோத் மற்றும் அவரது நண்பர்களை தடுத்து நிறுத்திய லோகநாதன், அவரது தம்பி பாஸ்கர் மற்றும் தந்தை குமார் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருதரப்பினரும் தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போதும் ஊர் பொது மக்கள் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். 


Advertisement

இந்நிலையில் இன்று காலை டிராக்டர் டேங்கில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்த லோகநாதன் தம்பி பாஸ்கரை வழிமறித்த வினோத்  மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பாஸ்கர், வினோத் மீது டிராக்டர் டயர்கள் ஏற்றி இறக்கியுள்ளார். அதில் படுகாயமடைந்து உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த வினோத்தை அவரது உறவினர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

Image result for arrest

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக புகாரின் பேரில் சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close