ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தார்.
ஆனால் தோஹா தடகளப் போட்டியின் போது எடுக்கப்பட்ட மாதிரிகளை ஊக்கமருந்து சோதனைகளுக்கு உட்படுத்திய போது, கோமதி மாரிமுத்து அதில் தோல்வி அடைந்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. இதற்கு கோமதி மாரிமுத்து மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் என் வாழ்க்கையில் நான் ஊக்க மருந்துகளை பயன்படுத்தியதில்லை எனவும் ஊக்க மருந்து சோதனையில் நான் தோல்வி அடைந்ததாக வெளியான செய்தி தவறு எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி புதிய தலைமுறைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
இந்திய தடகளக் கூட்டமைப்பு இடமிருந்து எங்களுக்கு எவ்வித தகவல்களும் வரவில்லை எனவும் எங்களை அவர்கள் தற்போது வரை தொடர்பு கொள்ளவும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் இது போன்ற செய்திகளை யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை எனவும் போலந்தில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டிக்கு கோமதி தற்போது தயாராகி வருகிறார் எனவும் சுப்ரமணி குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்