Published : 10,May 2019 02:49 AM

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Twin-quakes-jolt-Japan--no-tsunami-warning-issued

ஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். 

ஜப்பானின் தென்கிழக்கே உள்ள மியாசஷி-ஷி என்னும் இடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அதே இடத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். அலறியடித்தபடி தங்கள் வீடுகளில் வெளியேறினர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவானது. இது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.  சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்