Published : 26,Apr 2019 12:11 PM
“சேமிப்புக் கணக்கில் 4 ஆயிரம்; கார், நிலம் இல்லை” - வேட்பு மனுவில் மோடி தகவல்

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 52 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவில் தன்னுடைய அசையும், அசையா சொத்துக்களின் விவரங்களை தெரிவித்துள்ளார். அசையும் சொத்தின் மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 114.15 சதவீதம் உயர்ந்துள்ளது. 2014ம் ஆண்டில் அவரது அசையும் சொத்தின் மதிப்பு ரூ65.91 கோடி. அரசாங்க சம்பளமும், அதன் மூலம் கிடைக்கும் வட்டியும்தான் மோடிக்கு வருமானம்.
வேட்புமனு தாக்கலின்படி:-
- அசையும் சொத்து - ரூ1.41 கோடி
- அசையா சொத்து - ரூ1.10 கோடி
- ஆக மொத்தம் - ரூ2.51 கோடி
அசையும் சொத்து:-
- கையிருப்பு பணம் - ரூ38,750 (2014இல் - ரூ32,700)
- மோடியின் வங்கி இருப்பு - ரூ4,143 (2014ல் - ரூ26.05 லட்சம்)
- ஸ்டேட் வங்கியில் நிரந்த வைப்பு தொகை - ரூ1.27 கோடி (2014ல் - ரூ32.48 லட்சம்)
ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள 45 கிராம் எடைகொண்ட 4 தங்க மோதிரங்கள் உள்ளன. 2014இல் அந்த மோதிரங்களில் மதிப்பு ரூ1.35 லட்சம்.
அசையா சொத்து நிலவரம்:
குஜராத்தின் காந்திநகரில் அவருக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளது. அவ்வீட்டிற்கு மோடி உட்பட 4 பேருக்கு பங்கு உள்ளது.
- மோடியின் பொறுப்பில் எவ்வித சொத்துக்களும் இல்லை
- மோடி மீது எவ்வித குற்ற வழக்குகளும் இல்லை, கார் கிடையாது, வங்கி கடன் எதுவும் கிடையாது.