Published : 23,Apr 2019 03:08 AM
மக்களவை தேர்தலில் வாக்களித்தார் பிரதமர் மோடி

மக்களவை தேர்தலில் தனது வாக்கினை பிரதமர் மோடி பதிவு செய்தார்.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 2 கட்டங்களாக 186 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 3-ஆவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான தனது வாக்கினை பிரதமர் மோடி பதிவு செய்தார். அகமதாபாத்தில் உள்ள ராணிப் வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்து, ஜனநாயக கடமையை ஆற்றினார். முன்னதாக, காந்திநகரில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அவரிடம் வாழ்த்து பெற்றார். அத்துடன் தனது தாயிற்கு பிரதமர் மோடி இனிப்பும் வழங்கினார்.