[X] Close

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் ! 

Kings-XI-Punjab-won-by-6-wickets

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது.


Advertisement

ஐபிஎல் போட்டியின் 22வது போட்டி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவ் 1 (6) ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால் டேவிட் வார்னர் தனது அதிரடியை மாற்றி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த விஜய் சங்கரும் பொறுமையாகவே ஆடினார்.


Advertisement

26 (27 பந்துகளில்) ரன்களில் விஜய் சங்கர் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்த வந்த நபி 12 (7) ரன்களில் ரன் அவுட் ஆனார். விக்கெட்டை இழக்காமல் ஆடிய வார்னர் இறுதிவரையில் பொறுமையாகவே ஆடி 62 பந்துகளில் 70 ரன்கள் மட்டும் எடுத்தார். இறுதி நேரத்தில் களமிறங்கிய ஹூடா 3 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியில் அஸ்வின் ஒரு விக்கெட் மற்றும் ரன் அவுட்டை எடுத்தார். 

பின்னர் பேட் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெய்ல் 16 ரன்களில் வெளியேற, ராகுல் மற்றும் மயங் அகர்வால் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தனர். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முதல் மூன்று பந்துகளில் சேம் கரன் 5 ரன்கள் எடுத்தார்.


Advertisement

நான்காவது பந்தில் ராகுல் ஒரு பவுண்டரியை விளாசி பதட்டத்தை குறைத்தார். 5 அவது பந்தில் 2 ரன்கள் எடுத்து ஒரு பந்து மீதமிருந்த நிலையில், ஐதராபாத் அணி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Advertisement

Advertisement
[X] Close