Published : 25,Apr 2017 08:54 AM

குழந்தைகளை தத்தெடுத்தார் லாரன்ஸ்

lawrence-adopts-4-children

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை நடிகர் ராகவா லாரன்ஸ் தத்தெடுத்துள்ளார்.

சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீனிவாசன், யத்ரி தம்பதி. வெல்டிங் வேலை பார்த்துவந்த ஸ்ரீனிவாசனுக்கு விபத்து

ஒன்றில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் குடும்பத்தை காப்பாற்ற கஷ்டப்பட்டு வந்தார். இவர்களுக்கு ஒரே பிரசவத்தில் லக்‌ஷன்,

லக்‌ஷயா, லக்‌ஷிகா, லக்‌ஷா என நான்கு குழந்தைகள் பிறந்தன.

வறுமையில் வாடும் இந்தக் குடும்பம் பற்றி பத்திரிகையாளர் அமலன் மூலம் நடிகர் ராகவா லாரன்ஸுக்கு தெரிய வந்தது. இந்தக்

குழந்தைகளை ராகவா லாரன்ஸ் நேற்று தத்தெடுத்துக்கொண்டார். குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்காலத்தை நானே

பார்த்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்