இந்தியா முழுவதும் உள்ள நேரு யுவகேந்த்ரா சங்கதனில் பணிபுரிய, 225 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் (DYC's)
அக்கவுண்ட்ஸ் கிளர்க் கம் டைபிஸ்ட் (ACT's)
மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS)
காலிப்பணியிடங்கள்:
மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் - 100
அக்கவுண்ட்ஸ் கிளர்க் கம் டைபிஸ்ட் - 73
மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் - 52
மொத்தம் = 225 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 31.03.2019
வயது வரம்பு:
01.01.2019 அன்று குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 25 வயது வரையும் இருத்தல் வேண்டும்.
மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் என்ற பணிக்கு மட்டும் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆக இருத்தல் வேண்டும்.
தேர்வுக்கட்டணம்:
பொதுப் பிரிவினர் & ஓபிசி பிரிவினரில் ஆண்கள் - ரூ.700
பொதுப் பிரிவினர் & ஓபிசி பிரிவினரில் பெண்கள் - ரூ.500
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஊதியம்:
1. மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.56,100 முதல் அதிகபட்சமாக ரூ.1,77,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
2. அக்கவுண்ட்ஸ் கிளர்க் கம் டைபிஸ்ட் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.25,500 முதல் அதிகபட்சமாக ரூ.81,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
3. மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.18,000 முதல் அதிகபட்சமாக ரூ.56,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
1. மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் (DYC's) - என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதாவது ஒரு துறையில் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அத்துடன் 3-வருடம் இத்துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.
2. அக்கவுண்ட்ஸ் கிளர்க் கம் டைபிஸ்ட் (ACT's) - என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் பி.காம் பட்டப்படிப்பையோ அல்லது ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டப்படிப்பையோ முடித்திருத்தல் வேண்டும். கூடுதலாக 2-வருட அக்கவுண்ட்ஸ் துறையில் முன் அனுபவமும், டைப்பிங் திறமையும், கம்யூட்டர் அப்ளிகேஷன் சார்ந்த அறிவும் இருத்தல் வேண்டும். அத்துடன் 2-வருடம் இத்துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.
3. மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) என்ற பணிக்கு, மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். அத்துடன் 1-வருடம் இத்துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், https://ibpsonline.ibps.in/nyksmtsfeb19/ - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, http://nyks.nic.in/recruitment/GuidelinesEnglish15032019.pdf - என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!