[X] Close

உலகக் கோப்பை அணி தேர்வில், ஐபிஎல் பாதிப்பை ஏற்படுத்துமா?

IPL-won-t-impact-World-Cup-selection---Virat-Kohli

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணி தேர்வில், ஐபிஎல் தொடர் பாதிப்பை ஏற்படுத்தாது என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி20 போட்டி, 5 ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிவிட்டது. இப்போது ஒரு நாள் போட்டித் தொடர் நடக்க இருக்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது.


Advertisement

இந்த போட்டி பற்றி இந்திய கேப்டன் விராத் கோலி கூறும்போது, ‘’ஐபிஎல் போட்டிகளில் வீரர்களின் செயல்பாடு, உலகக் கோப்பைக்கான அணி தேர்வில், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘’உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறோம். இந்த தொடருக்கு முன் பாகவே உலக கோப்பை போட்டிக்கு எந்த மாதிரியான அணி தேவை என்பதை முடிவு செய்திருக்க வேண்டும். வீரர்களின் ஐ.பி.எல். செயல்பாட் டி ன்படி உலக கோப்பை அணியில் மாற்றம் இருக்கும் என்று நினைக்கவில்லை. சரியான கலவையில் அணி அமைவது முக்கியம். குறிப்பாக பேட்டிங் வரிசையில் யார், யார் இடம் பெற்றால் நேர்த்தியாக இருக்கும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். பந்துவீச்சில் பெரிய மாற்றங்களை எதிர்நோக்கவில்லை.


’தொடர்ந்து பரிசோதனை முயற்சி செய்து கொண்டிருந்தால் போட்டிகளை வெல்வது முக்கியமில்லையா?’ என்று கேட்கிறீர்கள். வெல்வதற் காகத்தான் ஆடுகிறோம். இல்லை என்றால் பந்து ஸ்டம்பை தாக்கட்டும் என்று விட்டுவிடுவோமே. இவற்றை எதிர்மறையாக பார்த்தால், அவற்றில் இருந்து எதிர்மறை விஷயங்கள் மட்டுமே தென்படும். நேர்மறையாக நோக்கினால் தான் நல்ல விஷயங்களை எடுக்க முடியும்’’ என்றார். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close