தொண்டர்களே பார்த்து வாக்களியுங்கள் என்பதற்கு தலைவர் எதற்கு என ரஜினிகாந்தின் அறிக்கைக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் பெண்களுக்கான, அரசியல் பயிலரங்கம் திருச்சியில் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், காஷ்மீரில் நடந்த தாக்குதல் அரசின் மிக மோசமான கவன குறைவு. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை தொடர்ந்து பதட்ட நிலையிலேயே வைத்திருக்கிறது. நீட் தேர்வுக்கு வரும் மாணவர்களை சோதிக்கும் அரசு, வெடி மருந்து எடுத்து வருபவர்களை சோதிக்க தவறி உள்ளது.
நாட்டில் பாதுகாப்பு வீரர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. தேர்தல் வரும் நேரத்தில் தான் இதுப்போன்ற குண்டு வெடிப்புகள் நடக்கும். இது கவன குறைவால் நடந்த உயிர்பலி. இதை வைத்து பா.ஜ.க அரசியல் செய்யும். நாட்டின் பிரச்சனையை யார் தீர்ப்பார் என்பதை கூறுபவர் தான் தலைவர். அதை கூறாமல் ரஜினிகாந்த் தன் தொண்டர்களுக்கு நீங்களே பார்த்து வாக்களியுங்கள் என கூறுகிறார்.
அவர் எப்படி தலைவராக இருக்க முடியும். ரஜினி என்ன செய்ய போகிறார் என்பதை சட்டமன்ற தேர்தலில் பார்க்கலாம். போர் வந்தால் பார்த்துக் கொள்வோம் என கூறினார். தற்போது போர் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது அங்கு அவர் செல்லட்டும். அதிமுக பாஜகவோடு தான் சேருவார்கள். கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'மொழி அரசியலில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்' - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்