டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.
இயக்குனர், நடிகர் டி.ராஜேந்தருக்கு 2 மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் சிம்பு ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டாவது மகன் குறளரசன், பாண்டிராஜ் இயக்கிய ’இது நம்ம ஆளு’ படத்துக்கு இசை அமைத்தார். மகள் இலக்கியாவுக்கு திருமணமாகிவிட்டது.
இந்நிலையில் தாய் உஷா, தந்தை டி.ராஜேந்தர் முன்னிலையில் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு நேற்று மாறினார். சென்னை அண்ணாசாலை மெக்கா மசூதியில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது.
இதுபற்றி டி.ராஜேந்தரிடம் கேட்டபோது, ‘’எம்மதமும் சம்மதம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பின்பற்றுபவன் நான். எம்மதமும் சம்மதம் என்ற கொள்ளையை பின்பற்றுவதால் மகனின் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்துள்ளேன்.
என் மூத்த மகன் சிம்பு சிவ பக்தர். மகள் இலக்கியா, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார். குரளரசன், இஸ்லாமை பின்பற்றுகிறார்’’ என்றார்.
Loading More post
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை