[X] Close

சட்டவிரோத பார்களை மூட தமிழக அரசுக்கு உத்தரவு

Chenni-HC-ordered-TN-govt-to-close-Illegal-Bar

தமிழகத்தில் சட்டவிரோதமாக செயல்படும் பார்களை மூட உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அதுதொடர்பான அறிக்கையை ஒருவாரத்தில் தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கோவை கருத்தம்பட்டியைச் சேர்ந்த விவசாயியான பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும், உரிய ரசீது வழங்கப்படாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், பார்கள் உரிம கட்டணம் செலுத்தாமல் செயல்படுவதாகவும், பார்களில் உணவுப் பண்டங்களின் விலைப்பட்டியல் இல்லாத நிலையில், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.


Advertisement

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், சட்டவிரோதமாக செயல்பட்ட மூவாயிரத்து 326 பார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றதாக 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து சட்டவிரோத பார்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரிடம் தமிழக உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை செயலாளர் அறிக்கை பெற்று, அவைகளை உடனடியாக மூட உத்தரவிட்டனர். மேலும், பார்களை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி 20-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிட்டனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close