[X] Close

சபரிமலையில் தரிசனம் செய்த பெண்களுக்கு கொலை மிரட்டல்!

Women-get-death-threats-for-entering-Sabarimala

சபரிமலையில் தரிசனம் செய்த பிந்து, கனகதுர்காவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. 

கேரளமாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து, மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகியோர் கடந்த மாதம் சபரிமலையில் தரிசனம் செய்தனர். இதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாகின. போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் தங்க வைத்தனர். பின்னர், வீட்டுக்குச் சென்ற கனகதுர்கா, தன்னை தனது மாமியார் தாக்கியதாக போலீசில் புகார் செய்தார்.


Advertisement

இதையடுத்து இருவருக்கும் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரின் வீடுகள், அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களிலும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இந்நிலையில் வீட்டுக்குள் அனுமதிக்க கணவர் வீட்டில் மறுத்துவிட் டதால், அரசு மகளிர் காப்பகத்தில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, காப்பக நிர்வாகிக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், ‘நாடாளுமன்ற தேர்தல் முடிவும்வரை கனகதுர்காவும், பிந்துவும் எங்கு வேண்டுமானாலும் நடமாடலாம். ஆனால், அவர்களுக்குரிய தீர்ப்பை விரைவில் அமல்படுத் துவோம்’ என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து காப்பாக நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close