[X] Close

“ஈவிஎம் இயந்திர பிரிவில் சுஜா வேலையில் இல்லை” - இசிஐஎல் விளக்கம்

Hooja-is-not-in-the-EMM-Mechanical-Unit----Illustration-of-ECIL

வாக்குப்பதிவு இயந்திரத்தின் வடிவமைப்பிலோ பயன்பாடு குறித்தான பிரிவிலோ சையத் சுஜா பணிபுரியவில்லை என இசிஐஎல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


Advertisement

பிரிட்டனை சேர்ந்த இந்திய பத்திரிகையாளர் சங்கம் சார்பில் லண்டனில் நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் நிபுணரான சையது சுஜா ஸ்கைப் மூலம் உரையாற்றினார். அப்போது, 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், ஈவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்ய உதவியது எனவும் இந்தச் செய்தியை வெளியிட ஒப்புக் கொண்ட கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டார் எனவும் புகார் தெரிவித்தார்.


Advertisement

பாஜகவை தாண்டி சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இயந்திரங்களை ஹேக் செய்வதற்காக தன்னை அணுகின என்றும், ஈவிஎம் இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதால் காங்கிரஸ் 201 இடங்களில் தோற்றது எனவும் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய எந்த வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும் போலிசிலும் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது.


Advertisement

இந்நிலையில், சையத் ஹூஜா குறித்து ஹைதராபாத்தில் உள்ள இந்திய மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக புகார் கூறிய சையத் சுஜா இசிஐஎல் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் எனவும் 2000 - 14 காலகட்டத்தில் சையத் சுஜா சாதாரண ஊழியராகத்தான் பணிபுரிந்தார் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் வடிவமைப்பிலோ பயன்பாடு குறித்தான பிரிவிலோ சையத் சுஜா பணிபுரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close