ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று 2017 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையத்தில் ஆஜராகும்படி ஏற்கனவே 3 முறை விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஆணையத்தில் ஆஜராகியுள்ள விஜயபாஸ்கரிடம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லாதது ஏன் என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ள முதல் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர்தான். அவரைத் தொடர்ந்து நாளை அதிமுக எம்.பி. தம்பிதுரை, நாளை மறுநாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணையத்தில் ஆஜராக உள்ளனர்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்