தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் முதன்முறையாக அரிய வகை ‘குள்ள நரி’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம், கேரள மாநிலம் இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய இரு மாவட்ட வன எல்லைகளைக் கொண்டது. புலிகள் தொடங்கி சிறுத்தை, யானை, கரும்புலி, செந்நாய், மிளா வகை மான், காட்டெருமை, நரி, பன்றி என 35க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த பாலூட்டிகள் இனங்கள் இங்கு உள்ளன. தேக்கடி பெரியார் புலிகள் காப்பகமாக 1982ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த வனப்பகுதிக்குள் தற்போது முதன்முறையாக ‘குள்ள நரி’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 9ம் தேதி, முல்லைப்பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் பகுதிக்கும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் தேக்கடி மதகு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த ‘குள்ள நரி’ இருப்பதை பெரியார் புலிகள் காப்பக சுற்றுப்புறச்சூழல் ஆய்வாளர் முனைவர் பாட்ரிக் டேவிட் பார்த்துள்ளார். உடனே புலிகள் காப்பக இயற்கை கல்வியாளர் ராஜ்குமார் அதனை படமாக்கியுள்ளார். அந்தப் படத்தைக்கொண்டு, அது ‘குள்ள நரி’ என்பதும், அது கானிஸ் ஆரியஸ் என்ற வகையைச் சேர்ந்தது என்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அழிவின் விளிம்பிலுள்ள உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தக் குள்ள நரிகள், கடந்த 1990ம் ஆண்டு முதல் தற்போது வரை தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் நடந்த விலங்கினங்கள் கணக்கெடுப்புகள் எதிலும் பதிவாகவில்லை என்பது ஒப்புநோக்கலின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் குள்ள நரியின் படங்களை தேக்கடி பெரியார் புலிகள் காப்பக இணை இயக்குனர் ஷில்பா வி.குமார் நேற்று வெளியிட்டுள்ளார். வழக்கமாக இரவில் மட்டுமே கூட்டமாக வெளிவரும் தன்மை கொண்டது இந்தக் குள்ள நரிகள். பகல் நேரத்தில் தனியாக வந்தது எப்படி என்பது குறித்து, கண்காணிப்பிற்கும் ஆய்விற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதி தமிழக வனப்பகுதியை ஒட்டியுள்ளதால், தமிழக வனப்பகுதிக்குளிருந்து தனது கூட்டங்களிலிருந்து வழி தவறி வந்திருக்கலாம். அல்லது இரை தேடி வந்திருக்கலாம் என வன இணை இயக்குநர் ஷில்பா வி குமார் தெரிவித்துள்ளார். மேலும் குள்ளநரிக்கான புகைப்படங்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்