[X] Close

’மகளை கடத்தப் போகிறோம்’: டெல்லி முதல்வருக்கு மிரட்டும் மெயில்!

Arvind-Kejriwal---s-daughter-gets-kidnap-threat

‘’உங்கள் மகளை கடத்தப் போகிறோம்’’ என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வந்த மெயில் காரணமாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக அந்த கட்சியின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். இவரது அலுவலகத்துக்கு கடந்த 9 ஆம் தேதி மெயில் ஒன்று வந்தது. அதில், ‘’உங்கள் மகள் ஹர்ஷிதாவைக் கடத்தப் போகி றோம். அவரைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறீர்கள்?’’ என்று எழுதப்பட்டிருந்தது.


Advertisement

இந்த மிரட்டல் மெயில் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், ஹர்ஷிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இந்த மிரட்டல் மெயிலை யார், எங்கிருந்து அனுப்பியது என்பது குறித்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close