Published : 14,Apr 2017 03:46 AM

தமிழ்ப் புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்

tamil-new-year-celebrate-in-all-over-india

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாட்டில் இன்று ஈடுபட்டனர்.

தமிழக மக்கள் மட்டுமின்றி கேரள மக்கள் விஷு, ஒடிசா மக்கள் மகா விஷுபா சங்கராந்தி விழாவை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். மலையாள மொழி பேசும் மக்களின் விஷு புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் பெருவாரியான மலையாள மொழி பேசும் மக்கள் குவிந்துள்ளனர்.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயில் உட்பட தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்த தமிழ்ப் புத்தாண்டு எல்லா வளமும் தரும் என அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

இந்த தமிழ்ப் புத்தாண்டு எல்லா வளமும் நலமும் தர வாழ்த்துவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் வாழ்த்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதே போல், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவிபச்சமுத்து உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சற்று முன்

எடிட்டர் சாய்ஸ்