சினிமா டிக்கெட், டிவி, பவர் பேங்க் போன்ற மக்கள் பயன்படுத்தும் 23 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017 ஆம் ஆண்டு ஜூலை முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டியை பொறுத்தவரை 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வரி வசூலிக்கப்படுகிறது. இது குறித்து முன்னர் பேசிய பிரதமர் மோடி ஜிஎஸ்டி வரி விதிப்பில் 99 சதவீதப் பொருட்கள் 18 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான வரிவிதிப்பிற்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்திருந்தார். நாட்டு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31ஆவது கூட்டம், கடந்த மாதம் 22ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மீதான வரி குறைப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ஆகவே பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை 18 சதவீதத்திற்கு கீழான வரிப் பிரிவிற்கு மாற்றும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 23 பொருட்களின் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி சினிமா டிக்கெட், தொலைக்காட்சிப் பெட்டி, பவர்பேங்க், 3ஆம் நபர் காப்பீடு கட்டணம், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள், உள்ளிட்ட 23 பொருட்களின் விலை குறைக்கப்பட்டது.
அதனையொட்டி புத்தாண்டு பரிசாக சாமானிய மக்கள் பயன்படுத்தும் இந்த 23 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் 100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 28 %ல் இருந்து 18%ஆகவும், 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 12%ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்களில் 28% உள்ள பொருட்கள் 12% ஆகவும் சில பொருட்கள் 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்