உலகிலேயே முதன்முறையாக பூமிக்கு அடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட ஹோட்டல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
புதுமையான படைப்புகளை உருவாக்குவதில் கைத்தேர்ந்தவர்களான சீனர்கள் பிரபல தொழில் நகரமான ஷாங்காய் நகரில் பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் சொகுசு ஹோட்டலை கட்டியுள்ளனர். பொதுவாக நிலக்கரி மற்றும் தங்க சுரங்கங்கள் மண்ணைக் கொட்டி சமன்படுத்தி வேறு வேலைகளுக்கு பயன்படுத்தப்படும். ஆனால் சீனாவிலோ சுரங்கத்தில் செயற்கை நீர் வீழ்ச்சியை உருவாக்கி, பூமிக்கு அடியிலிருந்து 330 மீட்டர் உயரத்தில் இந்தப் பிரம்மாண்ட ஹோட்டலை கட்டி செயல்பாட்டுக்கும் கொண்டு வந்துள்ளனர்.
இந்தப் பிரம்மாண்ட ஹோட்டலை 5000க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக கட்டியுள்ளனர். புர்ஜ் கலிஃபா கட்டத்தை உருவாக்கிய அட்கின்ஸ் நிறுவனம்தான் இந்த ஹோட்டலுக்கான திட்ட வரைப்படத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உலகிலேயே முதல் பாதாள ஹோட்டல் என்ற பெருமையை பெற்றுள்ள இந்தப் பிரம்மாண்ட ஹோட்டலின் முதல் 2 தளங்களில் மீன் அருங்காட்சியகம் வைக்கப்பட்டுள்ளது.
''இண்ட்டர் கான்ட்டினெண்ட்டல் டிரீம்லேண்ட்'' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் 337 அறைகள், உணவகம், நீச்சல் குளம், விளையாட்டு மைதானம், செயற்கை நீர் வீழ்ச்சி ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டவரும் இங்கு வந்து தங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்தச் சொகுசு ஹோட்டலில் தீம் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மலையேற்றம், நீர்சறுக்கு போன்றவற்றை கேளிக்கை விளையாட்டுகளுக்கும் ஹோட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் இந்த ஹோட்டலில் உள்ள அறையில் தங்குவதற்கு இந்திய மதிப்பில் 43 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஓய்வு எடுக்க அல்ல அழகை ரசிப்பதற்காகவே ஏராளமானவர்கள் இங்கு வருகை தர தொடங்கியுள்ளனர்.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!