அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் பாஜக வெற்றி வாகை சூட சிலவற்றில் அதிக கவனம் செலுத்துமாறு பாஜகவிற்கு ஆர்எஸ்எஸ் பரிந்துரை வழங்கியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5 மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி முகம் கண்டது. அடுத்தாண்டு நடைறெ உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட இந்த 5 மாநிலத் தேர்தலில் பாஜக தோற்றது அக்கட்சிக்கு பெரும் சரிவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் தற்போதையை தோல்வியிலிருந்து மீண்டு, மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற ஆர்எஸ்எஸ் சில பரிந்துரைகளை அக்கட்சிக்கு வழங்கியுள்ளது. அதாவது, நடுத்தர மக்களின் நிலைமையை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் விவசாயம், சிறு குறு தொழில்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த பாஜகவிற்கு ஆர்எஸ்எஸ் பரிந்துரைத்துள்ளது.
தற்போதைய பாஜக அரசு மிகப்பெரிய பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கையாக கூறுவது பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியை தான். ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சில வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு குறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சில இந்து அமைப்புகள் கருதுவதாக தெரிகிறது. எனவே தொழில், வர்த்தகம், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு ஏற்றவகையில் தேர்தல் கொள்கைகளை வகுக்குமாறு பாஜகவிற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆலோசனை வழங்கியுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் பாஜக தனது ஆதரவை இழக்க நேரிடும் என இந்து அமைப்புகளில் ஒன்றனா விஷ்வ இந்து பரிஷத் எச்சரிக்கை விடுத்தள்ளது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!