Published : 10,Apr 2017 01:57 AM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து

rknagar-rejection-by-election-officials

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மறுநாள் (12-ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இந்த தேர்தலில் அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக, பணப்பட்டுவாடா நடப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறின. இதையடுத்து தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் வருமானத் துறை சோதனை நடத்தியது. இதில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து தமிழக தேர்தல் அதிகாரிகள் டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். பின்னர் , நேற்று நள்ளிரவு தேர்தலை ரத்து செய்து அறிவித்தனர்.

வாக்காளர்களுக்கு பணம், பரிசு விநியோகம் தொடர்பான ஆதாரங்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் 29 பக்கத்துக்கு விரிவான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் 324ஆவது பிரிவின் கீழ் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், நேர்மையான தேர்தல் நடத்துவதற்கான சூழல் உருவாகும் போது தேர்தல் நடத்தப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த பல வழிகளை மேற்கொண்ட போதிலும், நூதன வழிகளில் பரிசு மற்றும் பணப் பட்டுவாடா நடைபெற்றதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்