ஒடிசாவுக்கு வரும் நடிகர் ஷாரூக் கானின் முகத்தில் மையைத் தெளிப்போம் என்று அங்குள்ள கலிங்க சேனா என்ற அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
ஷாரூக் கான், கரீனா கபூர் நடித்து 2001 ஆம் ஆண்டு வெளியான படம், ‘அசோகா’. இந்தப் படத்தில் அஜீத் குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந் தார். சந்தோஷ் சிவன் இயக்கிய இந்தப் படம் ஒடிசாவில் ஒரு வாரம் மட்டுமே ஓடியது. படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி போராட்டம் நடந்ததால், அங்கு படம் திரையிடப்படவில்லை.
Read Also -> பாகிஸ்தான் சீன தூதரகத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்!
’அசோகா’ வெளியாகி 17 வருடம் ஆன நிலையில், இப்போது புது பிரச்னை கிளம்பி இருக்கிறது. அந்த படத்தில் கலிங்கப் போரை தவறாகச் சித்தரித்துள்ளதாகவும் இதன் மூலம் ஒடிசா மக்களின் உணர்வுகளை பாதித்துவிட்டதாகவும் கலிங்க சேனா என்ற அமைப்பு புகார் கூறியுள்ளது. இது தொடர்பாக இதன் தலைவர் ஹேமந்த ராத் கடந்த 1 ஆம் தேதி போலீசில் புகாரும் கொடுத்திருந்தார்.
Read Also -> நடுவானில் போன் நம்பர் கேட்டு விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை: இளைஞர் கைது!
இந்நிலையில் ஒடிசாவில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வரும் 27 ஆம் தேதி ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. இதை காண வருமாறு நடிகர் ஷாரூக் கானுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று அவர் விளையாட்டைப் பார்க்க வர இருக்கிறார்.
Read Also -> மீ டூ விவகாரம்: நடிகர் மோகன்லாலை சாடிய ரேவதி!
’கலிங்க போரை தவறான கண்ணோட்டத்தில் சித்தரித்தற்காக, ஷாரூக் கான் மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லை என்றால் ஒடிசா அவரும் அவர் முகத்தில் மையை வீசுவோம். அவர் வரும் இடங்களில் எல்லாம் கருப்புக் கொடி காட்டுவோம்’ என்று அந்த அமைப்பின் செயலாளர் நிஹார் பானி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்காக வரும் அனைத்து விவிஐபிகளுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!